மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

இரு வேடங்களில் மேஹாலி

இரு வேடங்களில் மேஹாலி

பா.விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் அருத்ரா. இந்த படத்தின் மூலம் மேஹாலி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படம் இன்னும் வெளிவராதபோதும் அடுத்தடுத்துப் பல படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார்.

விக்ரம், தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இவர் ரகடம் என்ற படத்தில் இரு வேடங்களில் நடித்துவருகிறார். படம் குறித்து பேசிய மேஹாலி, “ஒரு பாடல் காட்சியைத் தவிர நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டது. ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் நடிப்பது உற்சாகமாக இருக்கிறது”என்று தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் மகா இயக்கும் இந்த படத்தில் ரோஷன் கதாநாயகனாக நடித்து தயாரிக்கிறார். கதாபாத்திரம் குறித்து பேசிய மேஹாலி, "நகரத்தைச் சேர்ந்த நவீனப் பெண்ணாகவும் கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்ணாகவும் நடிக்கிறேன். எனது திறமையை நிரூபிக்கும் வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது. ரேகா, ராஜேந்திரன், கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு சமயம் ரேகா ஜி எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தார். தமிழ் உச்சரிப்பை சரிபடுத்தினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon