மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

ரகுராம் ராஜனுக்கு நோபல் பரிசு?

ரகுராம் ராஜனுக்கு நோபல் பரிசு?

2017ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்கான தேர்வுப் பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜனது பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் தற்போது அமெரிக்காவில் கல்வித் துறையில் பணியாற்றி வருகிறார். அவர் இந்தியப் பொருளாதார வளர்ச்சியிலும், பொருளாதாரச் சீர்திருத்தங்களிலும் பெரும்பங்கு வகித்துள்ளார். கார்பரேட் நிதியத்தில் ரகுராம் ராஜனின் சிறப்பான பங்களிப்பைக் கருத்தில் கொண்டு அவரது பெயர் இந்த ஆண்டுக்கான பொருளாதாரப் பிரிவின் நோபல் பரிசு பெறுவோரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டில் ராஜனுடன் சேர்த்து 6 பொருளாதார வல்லுநர்கள் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். நோபல் பரிசு பெறும் வெற்றியாளரின் பெயர் இன்று (அக்டோபர் 9) அறிவிக்கப்படுகிறது.

மூன்றாண்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பர் 4ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. தற்போது அவர் சிகாகோ பல்கலைக் கழகத்தில் நிதித் துறை பேராசிரியராக உள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இளம் வயது தலைமை பொருளாதார ஆலோசகர் என்ற பெருமை ரகுராம் ராஜனைச் சேர்ந்ததாகும். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து விடைபெறும்போது அவரது பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டும் அவர் நிராகரித்தவர் என்பதும், பணமதிப்பழிப்புக்கு எதிராகத் தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon