மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

சிறு நிறுவனங்களுக்குச் சுமையாக ஜி.எஸ்.டி.!

சிறு நிறுவனங்களுக்குச் சுமையாக ஜி.எஸ்.டி.!

சிறு நிறுவனங்களுக்கு ரீஃபண்ட் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்குத் தேவையான குறுகிய காலத்திலான மூலதனத்தைப் பெற தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இதனால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால் சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால் பெரிதும் பாதிக்கப்பட்டது சிறு நிறுவனங்களே ஆகும். ஏனெனில் வரி இணக்கத்துக்கான செயல்பாடுகளை மேற்கொள்வதில் அவற்றுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய சுமையாக சிறு நிறுவனங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு போன்ற வரி இணக்கத்துக்கான தேவைகள் ஏராளமான சிறு நிறுவனங்களிடம் இல்லை.

மேலும், ரீஃபண்ட் தொகை கிடைக்கத் தாமதமாவதால் மூலதனத்தில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், வங்கியல்லாத நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று கடன் சுமையை அதிகரித்துக் கொள்ளும் நிலைக்குச் சிறு நிறுவனங்கள் தள்ளப்படும். ஆனால், தேவையான உள்கட்டமைப்பும், தொழில்நுட்பமும் கொண்ட பெருநிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் எந்தப் பிரச்னையும் ஏற்படாது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon