மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 30 மா 2020

நடிகைகளை விமர்சிக்கும் ரிச்சா

நடிகைகளை விமர்சிக்கும் ரிச்சா

பட வாய்ப்புகளுக்காக தயாரிப்பாளர்களுடன் உல்லாசமாக இருக்க தயாராக இருக்கும் நடிகைகளைப் பார்த்தால் கோபமாக இருக்கிறது என்ற சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக பாலிவுட் திரைத்துறையில் நடிகையாக வலம்வரும் இவர், கேங்க்ஸ் ஆஃப் வசேபூர், ஓய் லக்கி ஓய், மசான், சரப்ஜித் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. சில தினங்களுக்கு முன் இவர் அளித்த நேர்காணலில் பாலிவுட் திரைத்துறையில் வாய்ப்புகளுக்காக சமரசம் செய்துகொள்வது, போலியான உறவுகளில் இருப்பது என திரைத்துறையின் செயல்பாடு வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார்.

பாலிவுட் திரையுலகம் குறித்து அவர் பேசுகையில், "இங்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மிகக் கடினம். பாலிவுட் படங்களின் வர்த்தகத்தை பார்த்து கோபம் வருகிறது. இங்கிருப்பவர்கள் விசித்திரமாகவும் ஒழுக்கங்கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் நான் மன உளைச்சலுக்கு ஆளாவேன். கடினமாக இருக்கும். வாய்ப்புகளுக்காக, தயாரிப்பாளர்களுடன் தனிப்பட்ட முறையில் உல்லாசமாக நேரம் செலவழிக்க தயாராக இருக்கும் பெண்களை நினைத்தால் கோபமாக இருக்கிறது. அது உங்கள் தனிப்பட்ட விருப்பம் தான். நீங்கள் வேகமாக முன்னுக்கு வர அப்படி செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் அப்படி செய்வதால் அவர்கள் எல்லோரிடமும் அதை எதிர்பார்க்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "நான் சினிமா துறைக்கு வந்த புதிதில் மக்கள் தொடர்பாளர் ஒருவர் என்னை ஒரு நடிகருடன் டேட்டிங் போகச்சொல்லி தகவல் அனுப்பினர். ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த துறையில் சில நண்பர்கள் மட்டுமே எனக்கு உள்ளனர். அவர்களுடன் மட்டுமே வெளியில் செல்கிறேன். மேலும் சில போலியான நட்புகளாலும் பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். சில நடிகைகள் என்னுடன் நட்பாக பேசி நேரத்தை செலவிட்டு ஒரு படத்துக்கு நான் வாங்கும் சம்பளம் பற்றி தெரிந்து கொள்வார். பிறகு தயாரிப்பாளரிடம் சென்று, நான் ரிச்சாவை சந்தித்தேன். அவருக்கு உங்கள் படத்தின் மீது ஆர்வம் இருப்பது போலத் தெரியவில்லை. ஆனால் நான் ஆர்வமாக இருக்கிறேன். அவரை விட குறைவான சம்பளம் கொடுத்தால் போதும் என்று பேசி பட வாய்ப்பை நம் கண் முன்னே தட்டிப் பறிப்பார். நான் பல வாய்ப்புகளை இப்படி இழந்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon