மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

கச்சா எண்ணெய் விநியோகம் சீராகுமா?

கச்சா எண்ணெய் விநியோகம் சீராகுமா?

சர்வதேச எண்ணெய்ச் சந்தையில் விநியோகம் தேவைக்கு அதிகமாக இருந்தது. இதைச் சீரமைப்பதில் எண்ணெய் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளனர். 2018ஆம் ஆண்டிலும் இதை தக்கவைத்துக் கொள்ள கூடுதலாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஒபெக் (OPEC- எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கான அமைப்பு) பொதுச் செயலாளர் முகமது பர்கிண்டோ கருத்து தெரிவித்துள்ளார்.

எண்ணெய் விநியோகம் குறித்து மற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு ஆலோசனை வழங்குவதில் சவுதி அரேபியாவும், ரஷ்யாவும் முன்னிலை வகிக்கின்றன. இந்த ஒப்பந்தம் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே இந்த ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க எண்ணெய் உற்பத்தியாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

அக்டோபர் 8ஆம் தேதியன்று முகமது பர்கிண்டோ டெல்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திரப் பிரதானை சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு அவர் பேசுகையில், “விநியோகம் சீராகியுள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த மீட்சியை மேலும் ஓராண்டுக்குத் தக்கவைத்துக் கொள்ள கூடுதலாக சில நடவடிக்கைகள் தேவை” என்று அவர் கூறினார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon