மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

மனசாட்சி உள்ளவர்: தினகரன்

 மனசாட்சி உள்ளவர்: தினகரன்

அமைச்சர் செல்லூர் ராஜு மனசாட்சி உள்ளவர் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை (அக்டோபர் 09) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் கூறியதாவது:

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது யார் யார் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர் என்பது தெரியவரும் என அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், சசிகலாவுக்கு 5 நாட்களுக்கு மேல் பரோல் நீடிக்க வாய்ப்பில்லை என்றும், பரோலுக்கான நிபந்தனைகள் அரசால் உள்நோக்கத்தோடு திணிக்கப்பட்டவை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில், குரல் பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற அவசியம் தனக்கு கிடையாது என்று கூறிய தினகரன், வழக்குப் பதிவு செய்தால் நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலா என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது என அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது குறித்து கருத்து கேட்டதற்கு, செல்லூர் ராஜு மனசாட்சி உள்ளவர் என்றும், அதன் காரணமாகவே சசிகலாதான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு அமைய காரணம் என்று தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் என தினகரன் பதிலளித்தார்.

விரைவில் சட்டமன்றத்தில் நடக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்படுப்பின்போது, யார் யார் தங்களின் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர் என்ற முழுத் தகவல் வெளிவரும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனின் ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி, அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சு ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவதைக் காட்டுகிறது என்றும் சசிகலா முகத்தைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு மனசாட்சி உறுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon