மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

மல்டி ஸ்டார்களுடன் மணிரத்னம்

மல்டி ஸ்டார்களுடன் மணிரத்னம்

தமிழ் சினிமாவில் அழுத்தமான காட்சி மொழியுடன் பல ஹிட் படங்களைக் கொடுத்துத் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருப்பவர் மணிரத்னம். சிங்கிள் ஹீரோ சப்ஜெக்டுகளாகவே அதிகம் எடுத்துவந்த மணிரத்னம் தற்போது மல்டி ஸ்டார்களுடன் களமிறங்கியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அடங்கிய போஸ்டர் நேற்று வலைதளத்தில் வெளியானது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை `புரடக்‌ஷன் நம்பர் 17' என்று குறிப்பிட்டுள்ளனர். படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, ஃபஹத் ஃபாசில், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகியோர் நடிக்கவுள்ளனர். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் படமாக இது உருவாகிவருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆர்டிஸ்ட் போஸ்டர்

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon