மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 1 ஏப் 2020

என்னை வளர்த்துவிட்டவர் தனுஷ்

என்னை வளர்த்துவிட்டவர்  தனுஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரும், பாக்ஸ் ஆபிஸ் நாயகனுமான சிவகார்த்திகேயன், ஹீரோக்களின் நண்பனாகும் வாய்ப்பை எதிர்பார்த்த எனக்கு, வாய்ப்பு அளித்து வளர்த்துவிட்டவர் தனுஷ் என்று தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார் சிவகார்த்திகேயன். அவரின் அதிவேக வளர்ச்சியைப் பார்த்து கோலிவுட் வியப்பில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

"சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது பெரிய ஹீரோவாக ஆகும் எண்ணம் எனக்கு இல்லை. விஜய், அஜித் போன்ற ஹீரோக்களின் நண்பனாக நடித்தால் மட்டும் போதும் எனக் கருதினேன். எனக்கு வாய்ப்பு அளித்து நடிகர் தனுஷ், இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் வளர்த்துவிட்டனர்" என்றார்.

தொடர்ந்து, "சின்னத்திரையில் இருந்து யார் சினிமாவுக்கு வந்தாலும் சிவகார்த்திகேயன் போன்று வளர்ந்துவிடுவார் என்று பிறர் கூறுவதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்தினாலே வாழ்க்கையில் முன்னேறலாம். உங்களின் மனம் சொல்வதைக் கேட்டு நடந்தாலே போதும்" என்று பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon