மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

அக்டோபர் 09 : உலக தபால் தினம்!

அக்டோபர் 09 :  உலக தபால் தினம்!

" என்னாது.. மெட்ராஸ்ல இருந்து ட்ரங் கால் வந்துருக்க்கா... "

" குப்புசாமி.. உனக்கு கடுதாசி வந்துருக்குதுடேய்ய்ய் "

இந்த வார்த்தைகளெல்லாம் நாம் கேட்டிருப்போம்.

தகவல் பரிமாற்றம் அப்போது இப்படித்தான் இருந்தது என்றும் நமக்குத்தெரியும்.

ஆனால், இன்று வாட்ஸப் ,ஃபேஸ்புக்,வீடியோ சாட் என்றெல்லாம் வளர்ந்துவிட்டோம். தகவல் பரிமாற்றத்தின் முக்கியப்பங்கு தபால் தான்.

இன்று தபால் தினம்

உலக தபால் அமைப்பு 1874ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்ன் நகரில் தொடங்கப்பட்டது. 1969ல் இதை நினைவுபடுத்தும் விதமாக அக்.,9, உலக தபால் தினமாக அறிவிக்கப்பட்டது.

உலக தபால் அமைப்பில், இந்தியா உள்ளிட்ட 150 நாடுகள் உள்ளன. தபால் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், தபால் துறையின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும்

அக்.,9ம் தேதி, உலக தபால் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தபால் வாரமாக (அக்.9 முதல் அக்.15) கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்றும் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது. தேக்கி வைத்த அன்பிற்கு உயிரூட்டுவது கடிதங்களே..

அலுவலக ரீதியான புழக்கங்களே அதிகம் உள்ளன.

தற்போது தபால் எழுதும் பழக்கம் இல்லாததால், சுயமாக எழுதும் பழக்கமும் இளைஞர்களிடம் குறைந்து வருகிறது. அன்று புறாவிடம் செய்தி அனுப்பப்பட்டதன் பரிணாம வளர்ச்சியாக தபால்துறை செயல்படுகிறது என்றும் கூறலாம்.

இன்றும் லட்சக்கணக்கான மக்களின் தினசரி வாழ்க்கையில் தபால் துறை ஏதாவது ஒரு வழியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அலுவல் ரீதியான கடிதங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு இன்றும் தபால் துறை வசமே உள்ளது.

உலக தபால் அமைப்பு 1874ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்ன் நகரில் தொடங்கப்பட்டது. 1969ல் இதை நினைவுபடுத்தும் விதமாக அக்.,, உலக தபால் தினமாக அறிவிக்கப்பட்டது.

உலகில் முதலிடம்

உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியாவுள்ளது, இந்திய அஞ்சல் துறை 1764ல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.[

ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால், விரைவு தபால், இ- போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ், சேமிப்பு கணக்குகள் போன்ற பணிகளை தபால் துறை செய்கிறது.

பழைய நினைவுகளெல்லாம் வருகிறது. எனக்குத்தான் கடிதம் எழுத யாருமில்லை. எனக்கு நானே எழுதிக்கொள்கிறேன் என்றாவது எழுதப்பழகுங்கள்.

அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள்.

மீண்டும் கடிதம் எழுதுங்கள்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon