மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

பெட்ரோல் வரியைக் குறைக்காத கோவா!

பெட்ரோல் வரியைக் குறைக்காத கோவா!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களை வலியுறுத்தி வருகிறது. ஆனால் அவ்வரியைக் கோவா மாநில அரசு குறைக்க முன்வரவில்லை. அதற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தது. கலால் வரி குறைக்கப்பட்டதால் அதன் பயனை மக்கள் அனைவரும் பெறும் வகையில் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை 5 சதவிகிதம் வரையில் குறைக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி கோழிக்கோட்டில் ‘மக்கள் பாதுகாப்புப் பேரணி’ கூட்டத்தில் பங்கேற்ற தர்மேந்திர பிரதான் பேசுகையில், “பெட்ரோலியப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே அவர்களது சுமையைக் குறைக்கும் வகையில் மத்திய அரசானது பெட்ரோலியப் பொருட்களுக்கான வரியைக் குறைத்துள்ளதோடு, மாநில அரசுகளையும் வரிக் குறைப்புக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், கேரள அரசானது தனது நிலைப்பாட்டிலிருந்து மாறாமல் வரிக் குறைப்புக்கு இணங்க மறுக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது மக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காணாமல் இருக்கிறது” என்றார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon