மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

மெர்சல்: காதலும் கமர்ஷியலும்!

மெர்சல்: காதலும் கமர்ஷியலும்!

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியிருக்கும் மெர்சல் திரைப்படம் பல தடைகளைத் தாண்டி தீபாவளியன்று வெளிவர உள்ளது. இதன் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு சாதனைகளை இதன் டீசர் செய்து வருகிறது. இந்தப் படத்தின் இரண்டு புரோமோ வீடியோ நேற்று (அக்டோபர் 8) வெளியாகி இருக்கிறது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துவரும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இரண்டு புரோமோ வீடியோக்களில் ஒன்று விஜய்யின் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகளாக உள்ளது. இதில் காஜல், சமந்தா இருவருடனான காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடங்கியுள்ளது. கோவை சரளாவின் கண்ணில்லாம வாழ்ந்திடலாம் பொண்ணு இல்லாம வாழவே முடியாது என்ற வசனத்துக்குப் பின், ‘சிலாக்கி... டும்’ என வடிவேலுவின் நகைச்சுவை வசனமும் இடம்பெற்றுள்ளது.

மெர்சல் புரோமோவின் மற்றொரு வீடியோவில் விஜய்யின் மாஸ் வசனங்களும், ஆக்ஷன் காட்சிகளும் அடங்கியுள்ளன. இதில், ஒரு குழந்தை உருவாவதற்கு பத்து மாசம்... ஒரு பட்டதாரி உருவாவதற்கு மூணு வருஷம்... ஆனால், ஒரு தலைவன் உருவாவதற்கு ஒரு யுகமே தேவைப்படுது... என விஜய் பேசும் வசனம் ட்ரெண்ட்டாகி வருகிறது.

மெர்சல் காதல் புரோமோ வீடியோ

மெர்சல் கமர்ஷியல் புரோமோ வீடியோ

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon