மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

ஏற்றுமதிக்கு வரி கிடையாது!

ஏற்றுமதிக்கு வரி கிடையாது!

அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏற்றுமதி மீது வரி விதிக்கப்படாது என்று வருவாய்த்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய ரீஃபண்ட் தொகை வரத் தாமதமானதால் அவர்களின் மூலதனத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. இப்பிரச்னை குறித்து அக்டோபர் 6ஆம் தேதியன்று நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகியது. ஜூலை மாதத்துக்கான ரீஃபண்ட் தொகை அக்டோபர் 10ஆம் தேதி முதல் வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதத்துக்கான ரீஃபண்ட் தொகை அக்டோபர் 18ஆம் தேதி முதல் வெளியிடப்படும். இதற்காக பிரத்யேகமாக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருவாய்த்துறை செயலாளரான ஹஸ்முக் அதியா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “நவம்பர் மாத இறுதிக்குள் அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் ரீஃபண்ட் தொகை வழங்கப்படும். அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏற்றுமதிக்கு வரி வசூலிக்கப்படாது. ஜி.எஸ்.டிக்கு முன்பு இருந்தது போல ஆறு மாதங்களுக்கு ஏற்றுமதி மீது வரி விதிக்கப்படாது. ஜூலை முதல் ஆகஸ்ட் வரை ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் 67,000 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் 5,000 முதல் 10,000 கோடி ரூபாய் வரை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரீஃபண்ட் தொகையாக உள்ளது” என்று அவர் கூறினார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon