மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

தோனியின் மகளைக் கொஞ்சிய கோலி!

தோனியின் மகளைக் கொஞ்சிய கோலி!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மகேந்திர சிங் தோனியின் மகள் ஜிவாவுடன் கொஞ்சிப் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டி, தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் அக்டோபர் 7 அன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நீண்ட நாள்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் களமிறங்கிய தோனிக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தோனியின் பேட்டிங்கை பார்க்க வந்த அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

இதனிடையே, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தோனியின் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது இரண்டு வயது மகள் ஜிவாவுடன் நீண்ட நேரம் கழித்தார். அப்போது சிறுமி ஜிவாவுடன் கோலி கொஞ்சி பேசும் வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“ஜிவாவுடன் மீண்டும் இணைந்துள்ளேன். அவளது தூய களங்கமில்லா சூழலில் இருந்தது எனது ஆசீர்வாதம்” என்று கோலி கூறியுள்ளார். அந்த வீடியோவில் தோனியின் மகள் ஜிவா, கொஞ்சும் மொழியில் பேசுவதைக் கேட்டு கோலி கலகலவென சிரிக்கிறார். இது மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon