மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 அக் 2017

ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி!

ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி!

புதுச்சேரி - விழுப்புரம் ரயிலில் ஓவியப்போட்டி நேற்று (அக்டோபர் 08) நடைபெற்றது. இதில் 496 மாணவ மாணவிகள், செவிலியர்கள் பங்கேற்றனர்.

புதுவை மாநில ஓவியர் மன்றம் சார்பில் குழந்தைகளிடம் ஓவியக் கலையைத் தூண்டும் வகையில் ஆண்டுதோறும் ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நோய் தடுப்பூசி மூலம் வலிமையான இந்தியா என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் புதுவையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 3ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவ மாணவிகள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

புதுச்சேரியில் இருந்து மாலை 3.30 மணியளவில் ரயில் புறப்பட்டவுடன் போட்டி தொடங்கியது. ரயிலின் ஓட்டத்துக்கு ஈடு கொடுத்து மாணவ மாணவிகள் ஓவியங்களை வரைந்தனர். 4.35 மணிக்கு ரயில் விழுப்புரம் வந்தடைந்தது. விழுப்புரம் ரயில் நிலைய மேலாளர் மாணவர்களை வரவேற்று சிற்றுண்டி வழங்கினார்.

ஒவ்வொரு பெட்டிக்கும் 15 ஆசிரியர்கள் வீதம் 65 ஆசிரியர்களும், 12 என்.எஸ்.எஸ். மாணவர்களும், 2 செவிலியர்களும் போட்டி நடத்தும் பணியில் ஈடுபட்டனர். நவம்பர் மாதம் 12ஆம் தேதி ஓட்டல் கிரீன்பேலசில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இதற்குச் சட்டப்பேரவை துணைத் தலைவர் சிவகொழுந்து தலைமை வகித்தார். எம்.எல்.ஏ அன்பழகன் மற்றும் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கணேசன் ஆகியோர் விழாவைத் தொடங்கி வைத்தனர். புதுச்சேரி ரயில் நிலைய மேலாளர் அன்பழகன் வரவேற்றார். ஓவியர் மன்றத் தலைவர் இபேர் விதிகளை விளக்கி வைத்தார்.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

திங்கள் 9 அக் 2017