மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

பருத்திக்கு உரிய விலை கிடைக்குமா?

பருத்திக்கு உரிய விலை கிடைக்குமா?

இந்தியாவில் இந்த ஆண்டு பருத்தி உற்பத்தி அதிகரிக்கும். குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறையாமல் பருத்திக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதால் அரசு முகவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்திய பருத்தி ஆலைகள் சங்கம் இன்னும் இரண்டு வாரத்தில் பருத்தி உற்பத்தி குறித்து தகவல்களை அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.

2017-18ஆம் ஆண்டில் பருத்தி உற்பத்தி 375 லட்சம் பேல்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல சர்வதேச பருத்தி ஆலோசனை குழு இந்த 2017-18ஆம் ஆண்டில் பருத்தி உற்பத்தி 10 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும், உற்பத்தி 25.4 மில்லியன் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்தப் பருவத்துக்கான பருத்தி சாகுபடி குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடந்த 20 நாள்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இந்தப் பருவத்திலாவது பருத்திக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் பருவத்தில் பருத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி) விட சற்று அதிகமாகவே கிடைக்கும் என்று நம்புவதாக கந்தேஷ் கின்னர்ஸ் அசோசியேசன் தலைவர் பிரதீப் ஜெயின் கூறுகிறார்.

மேலும் சீனா, பாகிஸ்தான், துருக்கி, வங்கதேசம், வியட்நாம், பிரேசில் ஆகிய நாடுகளில் பருத்தி உற்பத்தித்துறை இந்த ஆண்டு வளர்ச்சியடையும் என்று ஐ.சி.ஏ.சி. கூறியுள்ளது. சர்வதேச அளவில் பருத்தி ஆலைகளின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 2.7 சதவிகிதமாக இருக்கும். இது கடந்த ஆண்டில் (2016-17) 1.6 சதவிகிதமாக மட்டுமே இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon