மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

பேட்டரி உற்பத்தி அவசியம்!

பேட்டரி உற்பத்தி அவசியம்!

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் வளர்ச்சியடைய லித்தியம் - அயான் பேட்டரி உற்பத்தி ஆலைகளை இந்தியாவில் அமைக்க வேண்டும் என்று நிதி ஆயோக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினரான வி.கே.சரஸ்வத் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் - அயான் பேட்டரிகளின் விலையைக் குறைப்பதுதான் முக்கிய சவாலாக இருக்கும். எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி தொழில்நுட்பத்தில் சர்வதேச அளவில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டுமென்றால், அதற்கான மதிப்புக் கூட்டு நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டும். பாகங்களை ஒன்றாகப் பொருத்திக் காரை உருவாக்குவது மட்டும் நமக்கு உதவாது.

லித்தியம் - அயான் பேட்டரிகளை உற்பத்தி செய்வதற்கான பெரிய ஆலைகளை இந்தியாவில் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் லித்தியம் - அயான் பேட்டரிகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. எனவே ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேட்டரிகளைச் சார்ந்தே இந்தியா இருக்கிறது. இறக்குமதி செய்யப்படும் பேட்டரிகளின் தரமும் கேள்விக்குரியது. எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த இந்தியா முயற்சி செய்யும்போது, அதில் பயன்படுத்தப்படும் சக்தியும் சூரியசக்தி போல சுத்தமானதாக இருக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon