மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

அருண் ஜெட்லி அமெரிக்கா பயணம்!

அருண் ஜெட்லி அமெரிக்கா பயணம்!

அனைத்துலக நாணய நிதியத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று (அக்டோபர் 9) அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார் என நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நிதி அமைச்சகம் நேற்று (அக்டோபர் 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியத்தின் ஆண்டு கூட்டங்களில் அருண் ஜெட்லி பங்கேற்கிறார். இதற்காக, ஒரு வாரத்துக்கு மேலாக அமெரிக்காவில் தங்கும் அருண் ஜெட்லி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

அமெரிக்காவில் முதல் நிகழ்ச்சியாக அக்டோபர் 9ஆம் தேதி நியூயார்க்கில் நடக்கவுள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்து கலந்துரையாட உள்ளார். அக்டோபர் 10ஆம் தேதி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றுகிறார்.

அதைத்தொடர்ந்து, அக்டோபர் 12ஆம் தேதி வாஷிங்டனில் நடைபெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் ஆண்டு கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இதுதவிர, இத்தாலி மற்றும் ஈரான் நாடுகளின் பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சர்களைத் தனித்தனியாகச் சந்தித்து, இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அமெரிக்கா செல்லும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், பொருளாதாரத் துறை செயலாளர் சுபாஷ் சந்திரா கர்க் மற்றும் மூத்த பொருளாதாரத் துறை வல்லுநர் அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய குழுவும் செல்கின்றனர்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon