மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

ரசிகர்களை விலக்கி சினிமாவா?

ரசிகர்களை விலக்கி சினிமாவா?

ஜி.எஸ்.டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரிவிதிப்பால் திரையரங்க டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. இதற்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் நடிகர் பிரசன்னா ரசிகர்களை சினிமாவிலிருந்து விலக்கி வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான மக்களின் ஒரே பொழுதுபோக்காக இருக்கும் சினிமாவுக்கு அதிகப்படியான வரிவிதிப்பதன் மூலம் அவை நேரடியாக மக்களைப் பாதிக்கிறது. டிக்கெட் விலை கடுமையாக உயரும்போது அடித்தட்டு மக்கள் சினிமா என்னும் கலையை நுகரமுடியாமல் போகிறது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரசன்னா நேற்று (அக்டோபர் 8) பதிவிட்டுள்ளார். அதில், “எந்த பெரிய படத்தைச் சேர்ந்தவர்களும் பேச போவதில்லை. ஏனென்றால் எப்படியும் அவர்கள் படம் ஓடிவிடும். இது சிறிய படங்களுக்கு மட்டுமே சாபமாக இருக்கும். இந்தப் பிரச்னையை நினைத்து கவலையாக இருக்கிறது. 10 வருடங்கள் கழித்து விலை உயர்த்தப்படுகிறது என்றால் பார்க்கிங், உணவு பண்டங்கள் விலையை நியாயமாக குறைக்க வேண்டும். எல்லோருக்கும் பேராசை. யாருக்கும் லாபத்தை விட்டுத்தர மனமில்லை. இது துறையைக் கண்டிப்பாக சாகடிக்கும். ரசிகர்களைத் திரையரங்குக்குக் கொண்டுவர வழிகள் தேடிக்கொண்டிருக்கும்போது அவர்களை அங்கிருந்து விலக்கி வைக்க விஷயங்கள் நடக்கின்றன. கலகம் பிறந்திருக்கிறது. விடிவு? ஊர் கூடி தான் தேர் இழுக்க வேண்டும். ஒவ்வொருவரிடமும் தனியாகக் கூற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon