மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: சிறு குறு நிறுவனங்களைக் காக்க ஜி.எஸ்.டியில் திருத்தம் வேண்டும்! - ரஜுல் அவஸ்தி

சிறப்புக் கட்டுரை: சிறு குறு நிறுவனங்களைக் காக்க ஜி.எஸ்.டியில் திருத்தம் வேண்டும்! - ரஜுல் அவஸ்தி

2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தை ஆரவாரத்துடன் அறிவித்தார். ‘இந்தியாவுக்கு வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்' என்று மோடி முழங்கினார். 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தத் திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் முக்கியத் திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. எனினும் இந்தியப் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக விளங்குவது மில்லியன் கணக்கான சிறு குறு நடுத்தர நிறுவனங்கள்தான். எப்போது சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்குகிறதோ அப்போதுதான் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் செயல்படத் தொடங்கும்.

சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் இயங்குவதற்கான ஒரு சுதந்திரமான சூழலை உருவாக்குவது கட்டாயமாகும். வரி நடைமுறைகளை எளிமையாக்குதல், உற்பத்தியை முடக்கும் செயல்களைத் திணிக்காதிருத்தல் போன்றவை இதற்கு அவசியமாகிறது. பணமதிப்பழிப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) ஆகிய இரண்டு முக்கியக் கொள்கைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இவை இரண்டும் ஒட்டுமொத்தமாக சிறு குறு நடுத்தர நிறுவனங்களை முடக்கியுள்ளது. ஜி.எஸ்.டி. முறைசாரா தொழிலை எப்படி முடக்குகிறது? பணமதிப்பழிப்பு நடவடிக்கையிலிருந்தே முழுமையாக இன்னும் முழுதாக மீண்டு வரவில்லை. குறைந்தபட்சம் ஜி.எஸ்.டியால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளிலிருந்து சிறு குறு நடுத்தர நிறுவனங்களை காக்க வேண்டும்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் உள்நாட்டு விநியோகச் சங்கிலியில் இடையூறு ஏற்பட்டுள்ளது என்று இந்தியாவின் தலைமைப் பொருளாதாரவியலாளர் ஜே.பி.மோர்கன் சஜ்ஜித் சினாய் கூறுகிறார். (சில மதிப்பீடுகள் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 4 சதவிகிதம்தான் உள்ளது என்று கூறுகின்றன) ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பழிப்பு ஆகிய இரண்டுமே முறைசாராத் துறையை பாதித்துள்ளன. பொருளாதார விமர்சகர் மிகிர் சர்மா ப்ளூம்பெர்க்கில், “ஜி.எஸ்.டி. மிகவும் சிக்கலனாதாக உள்ளது. நடுத்தர நிறுவனங்கள் போராடி வருகின்றன. சிறு நிறுவனங்களால் வரி கணக்காளரை நியமித்து இயங்க முடியாமல் தொழிலிருந்து வெளியேறி வருகின்றன” என்று எழுதியுள்ளார்.

சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டியில் சில மாற்றங்களை நான் கூற விரும்புகிறேன். உடனடியாக ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும். இதற்கான கொள்கை முன்மொழிதல்களை இடைக்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். பல நாடுகள் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு வாட்/ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் நிர்வாகச் சுமையை குறைப்பதற்கான வழிகளைக் கண்டுள்ளன. இந்தியாவும் அந்த வழிகளைப் பின்பற்றலாம். அதில் ஒன்றாக அடிக்கடி வரித்தாக்கல் செய்வதைக் குறைக்கலாம். பல நாடுகள் காலாண்டுக்கு ஒருமுறைதான் வரித்தாக்கல் செய்கின்றன. இது ஸ்லோவாக் குடியரசில் 3,75,000 டாலருக்கும் குறைவாகவும், போலந்தில் 1 மில்லியன் டாலருக்கும் குறைவாகவும், பெல்ஜியமில் 1.3 மில்லியன் டாலருக்கும் குறைவாகவும் விற்றுமுதல் செய்வோருக்கு இது பொருந்தும். கனடாவில் 4,30,000 டாலருக்கும் குறைவாக விற்றுமுதல் செய்வோர் ஆண்டுக்கு ஒருமுறை வரித்தாக்கல் செய்தால் போதுமானது. டென்மார்க்கில் அரை வருடத்துக்கு ஒருமுறை வரித்தாக்கல் செய்தால் போதுமானது. அதேபோல இந்தியாவும் ரூ.1 கோடிக்கும் குறைவாக விற்றுமுதல் செய்யும் நிறுவனங்களுக்கு வரித்தாக்கலை எளிமையாக்க வேண்டும்.

இங்கிலாந்து சிறு வணிகர்களுக்கு அவர்களின் விற்றுமுதலை கணக்கிட்டு வாட் வரியில் சலுகை வழங்குகிறது. இந்த நடைமுறை 4,20,000 டாலருக்குக் குறைவாக விற்றுமுதல் செய்வோருக்குப் பொருந்தும். இதில் முக்கியமான பிரச்னை என்னவென்றால் ரீஃபன்ட் தான். ஜி.எஸ்.டி. செலுத்தியபின் ரீஃபன்ட் தாமதமானால் தொழில் மூலதனம் தடைபடுகிறது. குறிப்பாக ரீபன்ட் தாமதமாவது, சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் இயங்குதலில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால்தான் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் உடனடியாக ரீஃபன்ட் தொகையைச் செலுத்த கோரிக்கை வைக்கின்றனர். ஐ.எம்.ஆர். அறிக்கை, “வாட் ரீஃபன்ட் முறை நமக்கு நல்ல அனுபவமாகும்” என்று கூறுகிறது. இந்த முறையில் 30 நாள்களுக்குள் ரீஃபன்ட் தொகைக்கு உரிமை கோரலாம். இவற்றையெல்லாம் செய்தால் சிறு குறு நிறுவனங்களின் சுமைகள் தணியும்.

தற்போது இந்தியா 20 லட்சத்துக்கும் குறைவாக விற்றுமுதல் செய்வோருக்கு மட்டுமே ஜி.எஸ்.டியில் பதிவு செய்ய கட்டாயமாக்கவில்லை. ரூ.1,60,000க்கு விற்றுமுதல் செய்திருந்தால் ஒரு நாளைக்கு ரூ.5,000 விற்றுமுதலாகும். இதனால் எல்லா சிறு குறு நிறுவனங்களையும் இது பாதிக்கும் என்பது புரிகிறது. முறைசாராத் துறையில் பெரும்பங்கு வகிப்பது சிறு குறு நிறுவனங்கள் தான். வரி கணக்குகளை முறையாகப் பின்பற்ற இந்த நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப அறிவு தேவைப்படுகிறது. மேலும் 24X7 என்ற அடிப்படையில் இணைய வசதியும் தேவைப்படுகிறது.

ரூ.1 கோடிக்கும் குறைவாக விற்றுமுதல் செய்வோருக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கையாகும். ரூ.1 கோடிக்கும் குறைவாக விற்றுமுதல் செய்யும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களை இந்த வரி வளையத்திலிருந்து வெளியேற்றினால் என்ன நடக்கும் என்ற கேள்வியும் எழலாம். அப்படி வெளியேற்றினால் மாநில அரசுக்கு வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறையும் என்ற கவலையும் உள்ளது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண ரூ.2 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்றுமுதல் செய்யும் எல்லா தொழில்களுக்கும் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கலாம்.

இன்னொரு காரணமும் இதில் தேவையாக உள்ளது. ஊழல்தான் இதற்குப் பின்னால் எழும் கேள்வி. அதிக எண்ணிக்கையிலான சிறு நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன என்பது ஊழல் கலாசாரத்தை ஊக்குவிக்காது. இது இன்ஸ்பெக்டர் ராஜ் காலசாரத்தையே நிலைநிறுத்தும். குறைந்தபட்ச கட்டண நிர்ணய முறையே, முறையாக சிறு குறு தொழில் நிறுவனங்களை பாதுகாக்க உதவும். இதன்மூலம் வரி செலுத்துவதன் மூலம் ஏற்படும் ஊழலிருந்தும் காக்கலாம்.

நன்றி: தி வயர்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon