மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 அக் 2017

ஆழமான காயங்களை அறுபது விநாடிகளில் குணப்படுத்தும் பசை!

ஆழமான காயங்களை அறுபது விநாடிகளில் குணப்படுத்தும் பசை!

ஆழமான காயங்களை தையல் போடாமலே அறுபது விநாடிகளில் குணப்படுத்தும் ‘மீட்ரோ’ என்ற பசையை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கியுள்ளனர்.

தற்போதுவரை ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டால், பிளவுபட்ட சதையை ஓட்ட வைப்பதற்குத் தையல் போடும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையில் காயம் குணமாக நீண்ட நாள்கள் ஆகும். இதுமட்டுமல்லாமல், காயம்பட்ட இடத்தில் தையல் போடுவதால் மிகுந்த வலி ஏற்படும். இந்த நிலையில், குறுகிய நேரத்தில் சதையை ஓட்ட வைப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் குழு கூறுகையில், “இது மிக எளிமையான மருத்துவ முறையாகும். பெரியளவிலான ஆழமான காயங்களுக்கு தையல் போடாமலே ஊசி சிரிஞ்சின் மூலம் ‘மீட்ரோ’ பசையைக் காயத்துக்குள் செலுத்தி, புறஊதா கதிர் ஒளியின் மூலம் 60 விநாடிகளுக்குள் விரைவில் ஒட்ட வைக்கலாம்.

விரிந்து, சுருங்கும் எலாஸ்ட்டிக் போன்ற தன்மையுள்ள இந்தப் பசை களிம்பு போல திசுக்களுடன் படிந்து உள்காயத்தை விரைவில் ஆற்றுகிறது. மேலும் இதயம், நுரையீரல் போன்ற விரிந்து சுருங்கும் உறுப்புகளில் ஏற்படும் காயங்களுக்கு நல்ல மருந்தாகவும் இருக்கும். சோதனையாக இந்த பசையை எலி மற்றும் பன்றிகளின் காயங்களுக்குப் பயன்படுத்தியபோது நல்ல பலன் கிடைத்துள்ளது.

ஆய்வக ரீதியாக இந்தப் பசையை மனிதர்களுக்குப் பயன்படுத்தி, வெற்றிகண்டால், அதன்மூலம் விபத்துகள் மற்றும் போரில் ஏற்படும் காயங்களில் ரத்தப்போக்கை தடுக்கவும், காயங்களை ஆற்றவும் இந்த ‘மீட்ரோ’ பசை நல்ல மருந்தாகவும் இருக்கும். மீட்ரோ விரைவில் மனித உயிர்களைக் காப்பாற்ற மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் என்று நம்புகிறோம்” என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

திங்கள் 9 அக் 2017