மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

மங்கலகரமான மக்காச்சோளம் - கிச்சன் கீர்த்தனா

மங்கலகரமான மக்காச்சோளம் - கிச்சன் கீர்த்தனாவெற்றிநடை போடும் தமிழகம்

தலைப்பை பார்த்த உடனேயே பூஜைப்பொருளில் மஞ்சள், குங்குமத்தைப் போன்று இணைத்துவிட்டார்களோ என ஆச்சர்யப்பட வேண்டாம்.

ஆரோக்கியம் நிறைந்த மக்காச்சோளத்தை அவ்வப்போது நாமும் உண்டால் மங்கலகரமாக, திடமாக பல்லாண்டு காலம் வாழலாம் என்பதை சொல்ல வந்தேன். எப்போதும் விதவிதமான முறைகளில் சாப்பிட்டு வந்த மக்காச்சோளத்தைச் சாலட் செய்து சற்று வித்தியாசமாக சாப்பிடுவோமா...

தேவையானவை:

1. மக்காச்சோளம் = 2 கப்

2. தக்காளி = 1

3. வெங்காயம் = 1

4. மிளகுத்தூள் = 2 ஸ்பூன்

5. எலுமிச்சைப் பழச்சாறு - 1 ஸ்பூன்

6. கொத்தமல்லித்தழை - சிறிதளவு

7. உப்பு - தேவையான அளவு

செய்முறை

தக்காளி மற்றும் வெங்காயத்தைச் சிறிதாக நறுக்கி கொள்ளவும். மக்காச்சோளத்தைப் பாதி அளவு வேகவைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் வேக வைத்த சோளம் ஆகியவற்றைப் போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு, எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். உடலுக்கு ஆரோக்கியமான, சத்து நிறைந்த ‘மக்காச்சோளம் சாலட்’ தயார்.

மருத்துவக் குணங்கள்

மக்காச்சோளத்தில் குளோரைடு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், குரோமியம், காப்பர், புளூரின், இரும்பு, அயோடின், மாங்கனீஸ், செலினியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை உள்ளன.

மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே, வைட்டமின் பி6, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவையும் உள்ளன.

சிறுநீரக கோளாறுகள் அனைத்தையும் குறைக்கும் சக்தி வாய்ந்தது. உடல் பருமன், மூலநோய் மற்றும் நீரிழிவைக் குறைக்கும். இவ்வாறு மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியாக நோயின்றி வாழ்வோம்.

கீர்த்தனா தத்துவம்

நான் வரமாட்டேன்னு அடம்புடிச்சு ஒரே இடத்துல நின்னு முயற்சி பண்ணாலும். செவுல்லயே அடிச்சு தரதரன்னு இழுத்துட்டுப்போகுது வாழ்க்கை.

கிச்சன் கீர்த்தனா 01

கிச்சன் கீர்த்தனா 02

கிச்சன் கீர்த்தனா 03

கிச்சன் கீர்த்தனா 04

கிச்சன் கீர்த்தனா 05

கிச்சன் கீர்த்தனா 06

கிச்சன் கீர்த்தனா 07

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon