மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

ப்ளூவேல்: மாணவருக்கு கவுன்சலிங்!

ப்ளூவேல்: மாணவருக்கு கவுன்சலிங்!

வேலூரில் ப்ளூவேல் விளையாடிய மாணவருக்குச் சென்னை அரசு மருத்துவமனையில் கவுன்சலிங் அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விளையாட்டு, ‘புளூ வேல்’. இந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவர்களின் உயிருக்கே உலை வைக்கிறது. இதற்கு அடிமையாகி இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மதுரை, சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வேலூரில் ப்ளூவேலுக்கு அடிமையான மாணவர் ஒருவருக்குச் சென்னையில் கவுன்சலிங் வழங்க அழைத்து வரப்பட்டுள்ளார்.

வேலூர் அருகே மகேந்திரவாடி கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்ற மாணவர் திருத்தணி அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ஒரு குழப்பத்தோடு தனித்துக் காணப்படுவதாக அவரது தந்தை உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாணவரைச் சிகிச்சை அளிக்கும்போது தான் ப்ளூவேல் விளையாடுவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுதவிர அவர் கூறிய பதில்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விளையாட்டை விளையாட ஆசிரியர் உட்பட சக மாணவர்களும் சிலர் உதவியதாக ஜானகிராமன் மருத்துவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த விளையாட்டைத் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன் என்றும் மருத்துவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் மனநல மருத்துவச் சிகிச்சைக்காக நேற்று (அக் 8) சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கவுன்சலிங் தொடங்கியுள்ளது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon