மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

சில்லறை வர்த்தக நிறுவனங்களின் கோரிக்கை நிறைவேறுமா?

சில்லறை வர்த்தக நிறுவனங்களின் கோரிக்கை நிறைவேறுமா?

ஒற்றை பிராண்டுகளில் இயங்கும் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு எம்.ஆர்.பியைக் கட்டாயமாகப் பதிவிடும் சட்டம் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய தொழில் குழுவை (இ.பி.ஜி) உள்ளடக்கிய தொழில் நிறுவனங்களான ஐகியா, ஹென்னஸ் & மாரிட்ஷ் ஏபி, டெகத்லோன் போன்ற நிறுவனங்கள் எம்.ஆர்.பியைக் கட்டாயமாக பதிவிடும் விதிகளைத் தளர்த்த வேண்டும் என்று அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தின.

இந்தியாவைப் பொறுத்தவரையில், எந்த பொருளிலும் அதன் பாக்கெட்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட நாள், பேக்கிங் தகவல்கள் அச்சிடப்பட வேண்டும். லேபிள் செய்ய ரூ.7 முதல் 10 கோடி வரை கூடுதலாக செலவாகிறது. இதனால் இடைத்தரகு முறையும் உருவாகிறது. எனவே, இதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தன. இதனால் உற்பத்திக்கான செலவு குறையும், பொருள்களின் விலையும் குறையும் என்று தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று இந்த விதிமுறைகளை மத்திய அரசு மாற்றியமைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சட்ட அமைச்சகத்துடன் விவாதித்து இதுகுறித்து உரிய முடிவெடுக்கப்படும் என்று நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. விரைவில் இதற்கான ஆணை பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon