மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

யானையின் பிறந்த நாளைக் கொண்டாடிய பள்ளிக் குழந்தைகள்!

யானையின் பிறந்த நாளைக் கொண்டாடிய பள்ளிக் குழந்தைகள்!

ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரில் ரஜினி என்ற யானையின் எட்டாவது பிறந்த நாளை நேற்று (அக்டோபர் 8) வனத்துறையினரும், பள்ளிக் குழந்தைகளும் சேர்ந்து விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர்.

எட்டு ஆண்டுகளுக்கு முன் யானைகளின் கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி யானையான ரஜினி இதே நாளில் வனத்துறையினரால் மீட்கப்பட்டது. ரஜினியை மீட்கப்பட்ட நாளையே அதன் பிறந்த நாளாக கொண்டாட ஆரம்பித்தனர். அதன்படி, நேற்று ரஜினியின் எட்டாவது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வனவிலங்கு வாரத்தின் ஒரு பகுதியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வு, வனவிலங்கு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது. வனவிலங்குகளுடன் நட்புறவு கொள்ள இந்த விழாவுக்குக் குழந்தைகளும் அழைக்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிறந்த நாள் விழா டால்மா வனவிலங்கு சரணாலயத்தின் வனப் பகுதிக்குட்பட்ட அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில், யானைக்குப் பெரிய கேக் வெட்டப்பட்டது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது