மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

இந்திய விமானப்படையின் 85ஆவது ஆண்டு தினம்!

இந்திய விமானப்படையின் 85ஆவது ஆண்டு தினம்!

இந்திய விமானப்படையின் 85ஆவது ஆண்டு தினம் இன்று (அக். 8) கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உட்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமானப்படை, பிரிட்டிஷ் ஆட்சியின்போது 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி உருவாக்கப்பட்டது. அப்போது, ராயல் இந்தியன் ஏர் போர்ஸ் என்று அழைக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தபின் இந்தியன் ஏர் போர்ஸ் எனப் பெயர் மாற்றப்பட்டது. கடந்த 1950 முதல் இதுவரையில், பாகிஸ்தானுடனான நான்கு போர்களிலும் சீனாவுடனான ஒரு போரிலும் இந்திய விமானப்படை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டதன் 85ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்கள் சாகச பயிற்சியில் ஈடுபட்டனர். இதுபோல் பல்வேறு விமானப்படை தளங்களிலும் விமானப்படை வீரர்கள் சாகசத்தில் ஈடுபட்டனர். இந்திய விமானப்படைக்குச் சொந்தமான, பழமையான, புதிய மற்றும் போர் விமானங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, விமானப்படை தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இதுபோல், பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon