மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 22 அக் 2020

தீயைத் தாக்குப்பிடிக்கும் மேலாடை!

தீயைத் தாக்குப்பிடிக்கும் மேலாடை!

தீயைத் தாக்குப்பிடிக்கும் மேலாடையைச் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

பொதுவாக குளிர், மழை, வெயில் போன்றவைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள அதற்கென பிரத்யேக ஆடைகள் உள்ளன. அதேபோல் தீயிலிருந்து தற்காத்துக்கொள்ள புதிய ஆடை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த பாஸ்கரன்.

“சோடியத்தை மூலப்பொருளாகக்கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆடை 500 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தைத் தாங்கும் தன்மை உடையது. இதை நீரில் நனைத்துப் பயன்படுத்தினால் 1500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டது.

வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும் இந்த உடையானது தீயணைப்பு துறை, காவல் துறை, அதிக வெப்பம் உள்ள இடங்களில் பணிபுரிபவர்கள் அணிவதற்கு ஏதுவான உடை. விதவிதமான வடிவங்களில், குறைந்த விலையில் இந்த ஆடையைத் தயாரித்து மக்கள் பயன்பெறும் வகையில் விற்க முடியும்” என பாஸ்கரன் கூறுகிறார்.

தீ காயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிரமப்படுபவர்களை பார்த்தே இந்தஆடையை உருவாக்கியுள்ளதாகவும் பாஸ்கரன் கூறுகிறார். இந்த மேலாடையின் பெயர் “ஹீட் அண்ட ஃபையர் ரெசிஸ்டன்ஸ்”.

பாஸ்கரனின் இந்தக் கண்டுபிடிப்பைத் தீயணைப்பு அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். மேலும் இதுகுறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon