மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 22 அக் 2020

கமலுக்கு(ம்) காய்ச்சல்!

கமலுக்கு(ம்) காய்ச்சல்!

நடிகர் கமல்ஹாசனுக்குக் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது அடுத்த இரண்டு நாள்களுக்கான நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன், அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். எந்த பிரச்னை என்றாலும் உடனடியாகத் தனது கண்டனக் குரலை ட்விட்டரில் பதிவுசெய்து வந்தார். இதற்கு அமைச்சர்களும் எதிர்வினையாற்றி வந்தனர்.

இடையில் 100 நாள்களுக்குள் தேர்தல் வந்தால் அதைச் சந்திக்கத் தயார் என்றும் கமல் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது இல்லத்தில், நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்படி தனது பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்தச் சூழ்நிலையில் கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக, அடுத்து இரண்டு நாள்களுக்கான அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாள்களாக கமல்ஹாசன் இருமல், தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

சில மாதங்களாகவே பரபரப்பாக இயங்கிவந்த கமல்ஹாசன், நற்பணி இயக்கத்தினருடனான ஆலோசனைக்குப் பிறகு எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon