மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 21 ஜன 2021

பெட்ரோல் பங்க்குகள் வேலை நிறுத்தம்!

பெட்ரோல் பங்க்குகள் வேலை நிறுத்தம்!வெற்றிநடை போடும் தமிழகம்

நாடு முழுவதும் வரும் அக்டோபர் 13ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

எரி பொருள்களை நுகர்வோரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விநியோகம் செய்வது மற்றும் பெட்ரோல், டீசல் விலைகளைத் தினமும் நிர்ணயித்தல் ஆகியவற்றுக்கு எதிராக, வரும் 13ஆம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய பெட்ரோலிய அமைப்பு நேற்று (அக் 7) தெரிவித்துள்ளது.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அக்டோபர் 27 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இந்திய பெட்ரோலியம் டிரேடர்ஸ் கூட்டமைப்பு, அனைத்து இந்திய பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் மற்றும் இந்திய பெட்ரோலியம் டீலர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றிலிருந்து 54,000க்கும் அதிகமான விற்பனையாளர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும், கடந்த நவம்பரில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதிலிருந்து, அரசு நடத்தும் எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்களால் (OMCs) புறக்கணிக்கப்பட்ட நீண்டகால கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.

அந்த கோரிக்கைகளில் டீலர்களுக்கான வரையறைகளை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மேலதிக திருத்தங்கள் செய்வதும், முதலீடுகளைத் திரும்ப பெறுவதற்கான வரைமுறைகளும், ஊழியர்களின் பிரச்னை சம்பந்தப்பட்ட தீர்மானங்களும், நஷ்டம் ஏற்பட்டால் கையாள்வதற்கான புது வழிமுறைகளும், போக்குவரத்து மற்றும் எத்தனால் கலப்பில் ஏற்படும் பிரச்னைகள் குறித்த தீர்மானங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இதுதவிர ஜி.எஸ்.டியின் கீழ் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை அரசு கொண்டுவர வேண்டும் என்று வியாபாரிகள் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon