மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

வேதிகா வெளியிட்ட காஞ்சனா அப்டேட்!

வேதிகா வெளியிட்ட காஞ்சனா அப்டேட்!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘காஞ்சனா 3’ (முனி 4) படத்தின் நாயகிகளாக ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியாவும், ‘முனி’ படத்தில் நடித்த வேதிகாவும் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக வேதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கேரவன் போட்டோ ஒன்றை பதிவிட்டுத் தெரிவித்துள்ளார்.

‘மொட்ட சிவா கெட்ட சிவா', `சிவலிங்கா’ போன்ற படங்கள் லாரன்ஸுக்குப் பெரிதும் ஏமாற்றம் அளித்தன. இந்தப் படங்களுக்குப் பிறகு இயக்குநர் ராஜமௌலியின் உதவியாளர் மகாதேவ் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது அந்தப் படத்தில் கவனம் செலுத்தமால் காஞ்சனா பட வரிசையில் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

அஜித்தின் வேதாளம், வீரம், விவேகம் உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த வெற்றி இதில் இணைந்துள்ளார். கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்டோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 20 நாள்கள் நடைபெற இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளனர். இதில் பணிபுரியவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon