மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

பாலியல் தொல்லை: பெண் எம்.பி. புகார்!

பாலியல் தொல்லை: பெண் எம்.பி. புகார்!

பாஜக தேசிய இளைஞர் அணி தலைவரும் , லோக் சபா எம்.பியுமான பூனம் மகாஜன் அகமதாபாத்தில் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்) நிகழ்ச்சி ஓன்றில் அக்டோபர் 1-ம் தேதி கலந்து கொண்டார் . அப்பொழுது அவர், ’நாட்டில் பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள் நானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளேன்’ என செய்தியாளர்களிடம் கூறினார்.

’நாட்டில் பல பெண்கள் ஒரு காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுகிறார்கள் . ஆனால் இதனை பெண்கள் சவாலாக எதிர்கொண்டு செயல்பட வேண்டும். இப்படி நடந்து கொள்ளுபவர்களிடம் நாம் தைரியமாக நடந்து, அவர்களை தண்டிக்க வேண்டும். நம் நாட்டில் பெண்களின் நிலை அமெரிக்கா போன்ற நாடுகளை விட கௌரவமாக உள்ளது’ எனவும் அந்நிகழ்ச்சியில் தெரிவித்தார் பூனம் மகாஜன்.

இக்கருத்திற்கு தேசிய காங்கிரஸ் பிரமுகர் நவாப் மாலிக் கேட்ட விளக்கத்தால் இப்போது பாஜகவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

’’ பூனம் மகாஜன் ஆரம்பத்தில் இருந்து பாஜகவில்தான் இருக்கிறார். அதனால், பாஜக கட்சியினர் தான் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்க முடியும். எனவே அந்த நபர் யார் என்று நிச்சயம் அவர் தெரிவிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் நவாப்.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon