மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

பருத்தி உற்பத்தி 12% உயரும்!

பருத்தி உற்பத்தி 12% உயரும்!

பருத்தி சாகுபடிக்குப் பருவம் ஆதரவாக இருந்ததால் நடப்பு ஆண்டில் பருத்தி உற்பத்தி அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பருத்தி பயிருக்கு தென்மேற்கு பருவமழை ஆதரவாக இருந்ததால், நடப்பு ஆண்டில் பருத்தி உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டின் பருத்தி உற்பத்தியை விடவும் நடப்பு ஆண்டில் உற்பத்தி 10 முதல் 12 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் பருத்தி உற்பத்தி 322.73 லட்சம் பேல்களாக (ஒரு பேல் என்பது 170 கிலோ) இருக்கும் என்று அரசு கணித்திருந்தது. ஆனால், நடப்பு ஆண்டின் உற்பத்தியோ அரசின் கணிப்புக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. கடந்த ஆண்டில் பருத்தி உற்பத்தி 337.25 லட்சம் பேல்களாக இருந்தது.

இந்தியப் பருத்தி சபையின் 95வது ஆண்டுக் கூட்டம் செப்டம்பர் 29ஆம் தேதியன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியப் பருத்தி சபையின் தலைவரான நயன் மிரானி பேசுகையில், “2017-18ஆம் ஆண்டின் அக்டோபர் - செப்டம்பர் பருவத்தில் பருத்தி சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு கடந்த ஆண்டை விட 12 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சகம் கணித்திருந்தது. பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பருவமழை ஆதரவாக இருந்ததால் உற்பத்தியும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலத்திலும் பருவமழை ஆதரவாக இருந்தால், 2017-18ஆம் பயிர் ஆண்டிலும் நம் நாட்டில் பருத்தி அறுவடை மிகச் சிறப்பாக இருக்கும்” என்று அவர் பேசினார்.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon