மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

சீன ஓபன்: சானியா ஜோடி முன்னேற்றம்!

சீன ஓபன்: சானியா ஜோடி முன்னேற்றம்!

சீன ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில், சானியா மிர்சா-பெங் ஜோடி வெற்றி பெற்றனர்.

சீனாவின் பீஜிங் நகரில், சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா-சீனாவின் பெங் ஜோடி, நெதர்லாந்தின் டெமி-பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்தப் போட்டியின் முதல் சுற்றை சானியா ஜோடி 7-5 என கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் சானியா ஜோடியின் ஆதிக்கம் தொடர இறுதியில் 7-5, 6-2 என எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இதே தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், தரவரிசையில் 23ஆம் இடத்திலிருக்கும் பிரான்சின் லூகாசை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் சுற்றை லூகாஸ் 6-4 என வென்று முன்னிலை பெற்றார். பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் லூகாஸின் ஆதிக்கம் தொடர, ஒரு கட்டத்தில் 6-6 எனச் சமநிலை பெற்றதால் ஆட்டம் `டை ப்ரேக்கர்' வரைச் சென்றது. இதில் நடால் 7(8)-6(6) எனப் போராடி வென்றார். மூன்றாவது சுற்றை நடால் 7-5 எனக் கைப்பற்றி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon