மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

சசிகலா பரோல் விண்ணப்பம்!

சசிகலா பரோல் விண்ணப்பம்!

புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான எம்.நடராஜன் கல்லீரல், சிறுநீரக செயலிழப்பைத் தொடர்ந்து சென்னையை அடுத்த குளோபல் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகிறார்.

அக்டோபர் 2 இரவு மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில்... ‘நடராஜனின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது. அவருக்கு கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவசரமாக தேவைப்படுகிறது’ என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில்... பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா தனது கணவர் நடராஜனின் உடல்நிலை சரியில்லாததால், 15 நாட்கள் தன்னை பரோலில் விடுவிக்குமாறு சிறை அதிகாரிகளிடம் இன்று (அக்டோபர் 3) விண்ணப்பம் அளித்துள்ளார்.

நடராஜனின் உடல்நிலை குறித்த மருத்துவ சான்றிதழ்களை தன் விண்ணப்பத்தோடு இணைத்து இந்த விண்ணப்பத்தை சிறை நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார் சசிகலா.

இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை வட்டாரங்கள், '' ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை கேட்டால் சிறைத்துறை அதிகாரிகளே முடிவெடுப்பார்கள். 15 நாட்கள் வரை பரோல் தேவைப்பட்டால், நீதிமன்றத்தையே அணுக வேண்டியதாக இருக்கும்''என்கிறார்கள். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சசிகலா விரைவில் பரோலில் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon