மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

தேயிலை விலை சரிவு!

தேயிலை விலை சரிவு!

கொச்சி தேயிலை விற்பனை ஏலத்தில் பல்வேறு தேயிலை வகைகளின் விலை சரிந்துள்ளது.

விற்பனை எண் 39ல் நடைபெற்ற ஏலத்தில் சி.டி.சி. ரக தேயிலைத் தூள் மொத்தம் 11,92,500 கிலோ விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டது. ஆர்தடாக்ஸ் வகை தேயிலை 22,000 கிலோ கொண்டுவரப்பட்டது. ஏலத்தில் பங்கேற்க நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்களும் வெளிநாட்டு விற்பனையாளர்களும் வந்திருந்தனர். சி.டி.சி. ரக தேயிலைத் தூள் ரூ.107 முதல் ரூ.154 வரையிலும், நடுத்தர வகை ரூ.82 முதல் ரூ.123 வரையிலும் ஏலம் போனது. சாதாரண ரகத் தேயிலை ரூ.56 முதல் ரூ.77 வரையில் விற்பனையானது.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் எதிர்பாராமல் பெய்த மழையால் கடந்த வாரம் கேரளாவில் தேயிலை உற்பத்தியில் சரிவு காணப்பட்டது. பூச்சி தாக்குதலாலும் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் தேயிலை உற்பத்தி 10 லட்சம் கிலோவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்த மழையால் தேயிலை உற்பத்தி சரிந்துள்ளதோடு, ஏல விற்பனை விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளதால் தேயிலை உற்பத்தியாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தென்னிந்திய தேயிலை உற்பத்தி ஜனவரி - ஜூலை மாதங்களில் 1.55 கோடி கிலோவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon