மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

கிராமப்புறங்களில் இணையப் பயன்பாடு!

கிராமப்புறங்களில் இணையப் பயன்பாடு!

இந்திய மொபைல் காங்கிரஸ் 2017 நிகழ்ச்சியில், இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவின் கிராமப்புறங்களில் 16 சதவிகிதம் மக்கள் மட்டுமே இணையம் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய வசதி, அதன் விலை, தயார் நிலை ஆகியவற்றைப் பொறுத்து ஒரு நாட்டின் இணைய வசதி இணைப்பு கணக்கிடப்படுகிறது. இதில் உலகளவில் இந்தியா 36ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இத்தகவலைத் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இணைய வசதி இணைப்பு இந்தியாவில் 33 சதவிகிதமாக உள்ளது.

இந்தியாவில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான சில வழிகள் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

டெலாய்ட் டூச் டோம்மாட்சு இந்தியா (Deloitte Touche Tohmatsu India) நிறுவனத்தின் பங்குதாரரான பி.என்.சுதர்சன் ஐ.எ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்துப் பேசுகையில், “தொலைத்தொடர்பு துறையால் ஒருங்கிணைப்பு, பணி, ஆட்சி ஆகியவை மேம்படுத்தப்படுகிறது. மேலும் சமுதாயப் பொருளாதார இணைப்பும் மேம்படும்” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon