மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

ஹேப்பியாக களமிறங்கும் லிங்கா நாயகி!

ஹேப்பியாக களமிறங்கும் லிங்கா நாயகி!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த ‘ஹேப்பி பாக் ஜயேகி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர் லிங்கா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

ஆனந்த் எல்.ராய் தயாரிப்பில் நகைச்சுவை படமாக உருவான ‘ஹேப்பி பாக் ஜயேகி’ திரைப்படத்தில் டயானா பெண்டி கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் காக்டெயில் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர். அவருடன் அபய் தியோல், ஜிம்மி ஷெர்கில், அலி ஃபைஸல் மற்றும் மோமல் ஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. முதல் பாகத்தை இயக்கிய முடாஸ்சர் அஜிஸ் இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளார்.

இந்த நிலையில், தற்போது ‘ஹேப்பி பாக் ஜயேகி’ இரண்டாம் பாகத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் இவர்களுடன் பஞ்சாபி பாடகர் ஜேசி கில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் குறித்து சோனாக்ஷி சின்ஹா தனது ட்விட்டர் பதிவில், “இது ஒரு மகிழ்ச்சியான பெரிய குடும்பம். இந்தப் பயணத்தை தொடங்குவதற்கு மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். மேலும், படத்தின் இயக்குநர் முடாஸ்சர் அஜிஸ், தயாரிப்பாளர் ஆனந்த் எல்.ராய், நடிகை டயானா பெண்டி ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் ‘ஹேப்பி’ கதாபாத்திரத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்க உள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon