மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

வளர்ச்சிப் பாதையில் ரத்தினங்கள் ஏற்றுமதி!

வளர்ச்சிப் பாதையில் ரத்தினங்கள் ஏற்றுமதி!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகை மற்றும் ரத்தின கற்களின் ஏற்றுமதி மதிப்பு 60 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று நகை மற்றும் ரத்தின கற்கள் ஏற்றுமதி புரமோஷன் கவுன்சிலின் அறிக்கை தெரிவிக்கிறது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நகை மற்றும் ரத்தின கற்களின் ஏற்றுமதி மதிப்பு 4 சதவிகிதம் அதிகரித்து 9.17 பில்லியன் டாலர்களாக உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் நகைகள், ரத்தின கற்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால் ஏற்றுமதி அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் நகை மற்றும் ரத்தின கற்களின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 8.84 பில்லியன் டாலராக இருந்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏற்றுமதியை அதிகரிக்க ஏற்றுமதி புரமோஷன் கவுன்சில் ஒரு திட்டத்தை தயாரித்து பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளது.

‘விஷன் 2022’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் நாடு முழுவதும் நகைப் பூங்காக்கள் அமைத்தல், சிறு நகை உற்பத்தியாளர்களுக்கு நவீன எந்திரங்களை வழங்கல், சர்வதேச வடிவமைப்பாளர்களுடன் கூட்டுப் பணியாற்றி வடிவமைப்புத் திறனை மேம்படுத்துதல் போன்றவை இடம்பெற்றுள்ளன. நகை மற்றும் ரத்தின கற்கள் ஏற்றுமதி புரமோஷன் கவுன்சிலின் தலைவர் பிரவீன் சங்கர் பாண்ட்யா செய்தியாளர்களிடம் பேசுகையில், “நகை மற்றும் ரத்தின கற்கள் ஏற்றுமதியை 40 சதவிகிதம் அதிகரிக்க விஷன் 2022 திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஜி.எஸ்.டியால் ஏற்றுமதி சரியும் எனவும் சிலர் கருதுகின்றனர்” என்று அவர் கூறினார்.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon