மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

420-க்கு தினகரன்தான் பொருத்தமானவர்: முதல்வர்!

420-க்கு தினகரன்தான் பொருத்தமானவர்: முதல்வர்!

420 என்பது டி.டி.வி. தினகரனுக்கே பொருத்தமாக இருக்கும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்கும் விழா இன்று காலை 1௦ மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தமிழக எம்.பி.-க்கள் பலர் சென்றிருந்தனர்.

துணை ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்தியதாகக் கூறினார். நீட் தேர்வுக்கு விலக்குகோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு விபரங்களை முழுவதுமாக படித்து பார்த்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பதில் தெரிவிக்க முடியும்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுக்கள் தொடங்கப்படவில்லை என்றும், விரைவில் இரு அணிகளும் இணையும் என்று நம்புவதாகக் கூறினார். 420 என்பது டி.டி.வி. தினகரனுக்கே பொருத்தமாக இருக்கும். கடந்த 3மாத நிகழ்வுகளைப் பார்த்தால், தினகரன்தான் அதற்குப் பொருத்தமாக இருப்பார் என்று தெரிவித்தார்.

தமிழக அரசு மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார். ஏற்கனவே ஸ்டாலின் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ளோம். சபாநாயகருக்கு எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ளோம். அதைத்தொடர்ந்து, மீண்டும் நாங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon