மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

விஜய் மல்லையா பதவி நீக்கம்!

விஜய் மல்லையா பதவி நீக்கம்!

யூனைட்டட் பிரீவரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து விஜய் மல்லையா நீக்கப்பட்டுள்ளார்.

யூனைட்டட் பிரீவரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலோ, முக்கிய நிர்வாகப் பதவிகளிலோ விஜய் மல்லையா தொடர இந்தாண்டு ஜனவரி 25ஆம் தேதி செபி (பங்குச் சந்தை பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற வாரியம்) கட்டுப்பாடு விதித்துள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் ஒழுங்குமுறை அறிக்கையில், “விஜய் மல்லையாவை இயக்குநர் பதவியில் இருந்து விலக்குவது குறித்து, நிறுவனங்கள் பதிவாளர் மற்றும் பிற ஆணையங்களிடம் தேவையான படிவங்களைத் தாக்கல் செய்ய நிறுவனத்தின் நிர்வாகக் குழுக்கூட்டம் அனுமதியளிக்கிறது” என்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த பல வங்கிகளுக்கு 9,000 கோடி ரூபாய்க்கும் மேலான தொகையை செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் இந்தத் தொகையை செலுத்தாமல் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி இந்தியாவை விட்டு இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டார் மல்லையா. இவரின் மீது இரண்டு வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. ஒன்று ஐ.டி.பி.ஐ. வங்கி சார்ந்த பிரச்னை ஆகும். மற்றொன்று 6,000 கோடிக்கும் அதிகமான தொகையை திருப்பிச் செலுத்தாததால் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அளித்துள்ள புகார்களாகும்.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon