மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

பாராக மாற்றப்பட்ட அரசுப் பள்ளி!

பாராக மாற்றப்பட்ட அரசுப் பள்ளி!

உத்திரபிரதேசத்தில், அரசுப் பள்ளியில் மது விருந்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ளது திதர்யா கிராமம். கடந்த திங்களன்று ரக்ஷாபந்தனை முன்னிட்டு இந்தப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்து. இந்நிலையில், அன்றைய தினம் அந்தக் கிராமத்தின் தலைவர் ராம்கிஷ் யாதவின் மகனுடைய பிறந்தநாள் என்பதால் பிரம்மாண்டமாக கொண்டாடத் திட்டமிடப்பட்டது. பள்ளிக்கு விடுமுறை என்பதால் பள்ளி வளாகத்திலேயே, இரவு மது விருந்து, ஆபாச நடனம் போன்றவை அரங்கேறியுள்ளது.

அடுத்த நாள் காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் பள்ளி வளாகம் அலங்கோலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக பள்ளியின் முதல்வர் கூறுகையில், கிராம தலைவர் என்னிடம் இருந்து பள்ளிச் சாவியை வாங்கிவிட்டுச் சென்றார். ஆனால் இது போன்ற பார்ட்டி நடத்தப்போவதாக எதுவும் கூறவில்லை. அடுத்த நாள் பள்ளிக்கு வந்தபோதுதான் எங்களுக்கு இச்சம்பவம் குறித்து தெரியவந்தது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக பள்ளியின் துணை ஆசிரியர் கல்வி அதிகாரிக்குப் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பள்ளியில் பார்ட்டி நடத்தப்பட்டது உண்மைதான் என்றும், எனினும் அதில் தான் கலந்துகொள்ளவில்லை என்றும் கிராம தலைவர் ராம்கிஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

பள்ளியில் ஆபாச நடனத்துடன் கூடிய நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon