மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

செம ரிலீஸூக்கு காத்திருக்கும் ஜி.வி

செம ரிலீஸூக்கு காத்திருக்கும் ஜி.வி

ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘குப்பத்து ராஜா', ‘100% காதல்’, சீமானின் ‘கோபம்’ என அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் தனது காட்சிகளில் சமீபத்தில் நடித்து முடித்திருந்தார். இப்படத்திற்கு முன்பு, பாண்டிராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வள்ளிகாந்த் இயக்கத்தில் ‘செம’ படத்தில் நடித்து முடித்திருந்தார். இப்படத்திற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் படத்தை தணிக்கைத் துறைக்கு அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில் படத்திற்கு `U' சான்றிதழ் கிடைத்துள்ளது.

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அர்த்தனா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி இசையமைத்துள்ள இப்படத்திற்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவாளராகவும், பிரதீப்.E.ராகவ் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். ‘லிங்க பைரவி கிரியேஷன்ஸ்’ பி.ரவிச்சந்திரனுடன் இணைந்து இயக்குநர் பாண்டிராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.

ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தின் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா வெளியீட்டு உரிமையை ‘ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் டி.முருகானந்தம் அதிக விலைக்குக் கைப்பற்றியிருந்தார். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து, தணிக்கைத் துறைக்கு அனுப்பியதில், படத்திற்கு `U' சான்றிதழ் கிடைத்துள்ளதால், வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon