மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

காதி பொருட்களுக்கு விலக்களிக்க கோரிக்கை!

காதி பொருட்களுக்கு விலக்களிக்க கோரிக்கை!

காதி பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க மத்திய நிதியமைச்சகத்திடம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையில் காதி நூலுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற காதி பொருட்களுக்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலத்தில் இருந்தே காதி மற்றும் கிராமப்புற தொழில் ஆலைகள் துறை வரி விலக்கு சலுகையை பெற்று வருகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் இணையமைச்சர் ஸ்ரீ கிரிராஜ் சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்கையில், “சிறு நிறுவனங்கள் துறைக்கு அளிக்கப்படும் விலக்கு 150 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பல காதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த வரி விலக்கு நீக்கப்பட்டது.

காதி நிறுவனங்கள் ஜி.எஸ்.டியின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், காதி பொருட்களுக்கு 5 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டிக்கு முன்பு கிராமப்புற ஆலைகள் துறைக்கு 14.30 சதவிகிதம் வரையில் வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது ஜி.எஸ்.டியில் 12 சதவிகிதம் முதல் 28 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. காதி பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க நிதியமைச்சகத்திடம் குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon