மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

ஆண்டாளாக அனுஷ்கா!

ஆண்டாளாக அனுஷ்கா!

நாகார்ஜுனா, அனுஷ்கா, ஜெகபதி பாபு, சம்பத் போன்ற முக்கிய நடிகர்கள் இடம்பெற்றுள்ள திரைப்படம் ‘ஓம் நமோ வெங்கடேசய’. இத்திரைப்படம் தெலுங்கில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இத்திரைப்படம் தமிழில் ‘பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

ஏ.எம்.ஆர். சாய் கிருபா தயாரிப்பில் உருவான இந்தத் திரைப்படத்தில், நடிகை அனுஷ்கா, பெருமாளின் தீவிர பக்தையான ஆண்டாள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மரகதமணி இசையில் கே.ராகவேந்திர ராவ் கதை எழுதி இயக்கியுள்ளார். ‘பிரமாண்ட நாயகன்’ திரைப்படம், வெங்கடேசப் பெருமாளின் பக்தனான ராமன் என்பவனின் வாழ்க்கையின் உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட படமாகும். இத்திரைப்படத்தைப் பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் வெளியிடப் படக் குழு திட்டமிட்டுள்ளது. பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு, திருப்பதி உருவான விதம் எனப் பல்வேறு அம்சங்களை இத்திரைப்படம் கையாள்கிறது. தெலுங்கில் மாபெரும் வெற்றி திரைப்படமான ஓம் நமோ வெங்கடேசய, பல மாதங்கள் கழித்துத் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. அனுஷ்காவுக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் செல்வாக்கு இந்தப் படத்துக்குக் கைகொடுக்குமா என்பதை அறியப் புரட்டாசிவரை காத்திருக்க வேண்டும்.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon