மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

அரையிறுதி: உறுதி செய்யுமா காரைக்குடி அணி?

அரையிறுதி: உறுதி செய்யுமா காரைக்குடி அணி?

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இரண்டாவது சீசன் கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் எட்டு அணிகளைக்கொண்ட இந்தத் தொடரில் ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை விளையாட வேண்டும்.

அனைத்து அணிகளும் ஐந்து போட்டிகளை நிறைவுசெய்துள்ளன. ஒரு போட்டியிலும் வெற்றி காணாத மதுரை அணியும், ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்ற திருச்சி அணியும் அரையிறுதி வாய்ப்பினை இழந்துவிட்டன. நேற்று (ஆகஸ்டு 10) நடைபெறவிருந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டு கோவை மற்றும் மதுரை அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் தொடங்கியது முதல் இதுவரை மதுரை அணி ஒரு புள்ளி கூட பெற்றது இல்லை. கடந்த 2016 சீசன் முதல் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள மதுரை அணி பெற்ற முதல் புள்ளி இதுவாகும்.

இன்று (ஆகஸ்டு 11) நடைபெறும் போட்டியில் காரைக்குடி அணியும், திருச்சி அணியும் மோதுகின்றன. காரைக்குடி அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஐந்து போட்டிகளில் விளையாடி அதில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள திருச்சி அணி, இனி விளையாடவிருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்குள் நுழைய முடியாது. இருப்பினும் கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற முயற்சி செய்யும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பான ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon