மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

சீனப் பொருள்களுக்கு இறக்குமதி குவிப்பு வரி!

சீனப் பொருள்களுக்கு இறக்குமதி குவிப்பு வரி!

இந்தியாவில் 93 சீனத் தயாரிப்புப் பொருள்களுக்கு இறக்குமதி பொருள்களின் கையிருப்புக்கான வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி பொருள்களின் கையிருப்பை அதிகரித்து, அப்பொருள்களின் விலை அதிகரிக்கும்போது அவற்றை சிலர் பயன்படுத்தக்கூடும். இதைத் தடுக்க அப்பொருள்களுக்கு ஆன்டி-டம்ப்பிங் வரி எனப்படும் இறக்குமதி பொருள்கள் கையிருப்புக்கான வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் 93 சீனத் தயாரிப்புப் பொருள்களுக்கு இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனங்கள், பெட்ரொ கெமிக்கல்ஸ், எஃகு மற்றும் பிற உலோகங்கள், இழைகள், நூல், ரப்பர், பிளாஸ்டிக், எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள் மற்றும் நுகர்வோர் பொருள்களுக்கு இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாகப் பதிலளிக்கையில், “சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 93 பொருள்களுக்கு ஆன்டி-டம்ப்பிங் வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதி குறித்து ஆன்டி-டம்ப்பிங் மற்றும் கூட்டணி வரிகளுக்கான பொது இயக்குநரகம் 40 வழக்குகளைத் தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon