மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

மூடப்பட்ட ஜவுளி ஆலைகள்!

மூடப்பட்ட ஜவுளி ஆலைகள்!

சுமார் 610 ஜவுளி மற்றும் செயற்கை இழை ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் அஜய் தம்தா மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளிக்கையில், “ஜவுளித்துறை ஆணையர் அலுவலகத்தின் தகவலின்படி, 2017ஆம் ஆண்டின் ஜூன் 30ஆம் தேதி வரையில் 610 பருத்தி மற்றும் செயற்கை இழை ஆலைகள் மூடப்பட்டுள்ளது. இந்த ஆலைகளில் மொத்தம் 3,00,697 ஊழியர்கள் பணிபுரிந்துள்ளனர். ஆனால், மின் தறி ஆலைகள் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.

செப்டம்பர் 15, 1986 முதல் ஜவுளித்துறை பணியாளர்கள் புனர்வாழ்வு நிதித் திட்டத்தை ஜவுளித்துறை அமைச்சகம் அமல்படுத்தியது. தனியார் ஜவுளி ஆலைகள் மூடப்பட்டால் ஊழியர்களுக்கு இந்தத் திட்டத்தின்கீழ் இடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை ஏப்ரல் 1, 2017 முதல் ராஜீவ் காந்தி ஸ்ரமிக் கல்யாண் யோஜனா திட்டத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon