மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

கொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

கொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

கொடுங்கையூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததையடுத்து, தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது.

சென்னை கொடுங்கையூரில் ஜூலை 15ஆம் தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயை அணைக்கப் போராடிய தீயணைப்பு வீரர் ஏகராஜ் பலியானார். பொதுமக்கள், பேக்கரி கடை உரிமையாளர் என 48 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்குக் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரந்தாமன் மற்றும் அபிமன்யூ என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து தீ விபத்தில் பலி எண்ணிக்கை மூன்று ஆக உயர்ந்தது. மேலும், சிகிச்சை பெற்றுவந்த பேக்கரியின் உரிமையாளர் ஆனந்தன் மற்றும் அவருடைய உறவினரான மகிலவன் (18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தால், பலி எண்ணிக்கை ஐந்து ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த பாஸ்கர் என்பவர் நேற்று (ஜூலை 22) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தற்போது, தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 பேர் 40 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயம் அடைந்தவர்கள். மூன்று பேர் மட்டுமே லேசான தீக்காயம் உடையவர்கள். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டீன் வசந்தாமணி தெரிவித்துள்ளார் .

சனி, 22 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon