மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு நிலக்கரி இறக்குமதி!

ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு நிலக்கரி இறக்குமதி!

கடந்த நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016-2017ஆம் நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் 19.95 மில்லியன் டன் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இந்த நிலக்கரியின் மதிப்பு 1,00,231.3 கோடி ரூபாய் ஆகும். அதற்கு முந்தைய 2015-2016ஆம் நிதியாண்டில் 203.9 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இந்த நிலக்கரியின் மதிப்பு 1,04,506.6 கோடி ரூபாய் ஆகும். 2013-2014ஆம் நிதியாண்டில் 166.8 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியைவிட தேவை அதிகமாக இருப்பதால், இறக்குமதியை நம்பி இருக்கவேண்டிய நிலை உள்ளது. இந்திய நிலக்கரி தேவையில் 80 சதவிகிதத்தை ‘கோல் இந்தியா’ பூர்த்திச் செய்கிறது. கோல் இந்தியா நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 600 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

சனி, 22 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon