மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஜூலை 2017

கேணி திரைப்படம் : கதை இதுவா?

கேணி திரைப்படம் : கதை இதுவா?

அண்மைக்காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஆர்.பார்த்திபன், மலையாள இயக்குநர் எம்.ஏ.நிஷாத் இயக்கவிருக்கும் ‘கேணி’ திரைப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க உள்ளார். பார்த்திபனுடன் நடிகை ஜெயபிரதா, நாசர், தலைவாசல் விஜய் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கிறார்கள். கேரள மாநிலம் உருவான 1956 ம் ஆண்டில் சம்பவங்கள் நடப்பதுபோல் ‘கேணி; படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.

தமிழகத்தையும், கேரளாவையும் தனித்தனி மாநிலமாகப் பிரிக்கும்போது, ஒரு கிணறு, இரண்டு எல்லைக்கும் பொதுவான பகுதியில் அமைந்து விடுகிறது. அந்த கிணற்றை சொந்தம் கொண்டாடும் இரண்டு எல்லைப்பகுதிகளின் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கேணி படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.

மலையாள இயக்குநராக இருந்தாலும், தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் கேணி படத்தை இயக்கயுள்ளார் நிஷாத். அதனால்தான் இந்தப்படத்தில் நடிக்கப் பார்த்திபன் சம்மதம் தெரிவித்துள்ளார். கேணியைப் பற்றி கதைபோல் தோன்றினாலும், உண்மையில் முல்லைப்பெரியாறு அணையைப் பற்றிய படம் இது என்று கூறப்படுகிறது.

வியாழன், 13 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon