மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

விவசாயிகளின் கவலை தீர்ப்பான் மகேஷ்

 விவசாயிகளின் கவலை தீர்ப்பான் மகேஷ்

ராமசாமி ஒரு விவசாயி. உழுதுண்டு வாழும் மண்ணைத் தெய்வமாக மதிப்பவர். மண்ணுக்கு ஒரு தீங்கென்றால் அவரால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. இயற்கைக்கு எதிரான காரியங்களைச் செய்யும் போதுதான் அழிவுகள் நேர்கிறது என்பது ராமசாமியின் நம்பிக்கை. ராமசாமி பிஎஸ்ஸி அக்ரி படித்தவர். அதனால், அவர் அறிவியலுக்கு எதிரானவர் அல்ல. அழிவற்ற அறிவியலை அவர் ஒருபோதும் மறுத்ததில்லை, எதிர்த்ததில்லை. சமீபகாலமாக அரசு சில திட்டங்களை வகுப்பதும், அதற்கு எதிராகச் சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் விவசாயிகளும் போராடுவதையும் ராமசாமி உற்றுக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்.

இதில் உண்மை நிலையை உணர வேண்டும் என்பதுதான் ராமசாமியின் நிலைப்பாடு. அதாவது, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நியூட்ரினோ இப்படிப் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேற்கண்ட திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வெடிப்பது ஏன்?… சுற்றுச்சூழல்ஆர்வலர்கள் கருத்தும், அரசு சார்பில் திட்டங்களை வகுக்கும் வேதியியல் நிபுணர்களின் கருத்தும் வேறுபட்டு இருப்பது ஏன்? என்ற கேள்வி ராமசாமியின் மனதில் எழுந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில்தான் ராமசாமி, கல்லூரியில் அடியெடுத்து வைக்க இருக்கும் தன் மகன் மகேஷை அழைத்துப் பேசினார்.

“மகேஷ், ஹைட்ரோ கார்பன் அப்புறம் இந்த மீத்தேன் திட்டத்துக்கு எதிரா மக்கள் போராடுகிறார்கள். ஆனா அரசோ இந்தத் திட்டம் நல்லதென்று சொல்லுகிறது.. இதுல எது உண்மைன்னு நீ நினைக்கிற? நீ ப்ளஸ் டூல சைன்ஸ்தானே படிச்ச… உங்க வாத்தியாருங்க என்ன சொல்றாங்க?” “அப்பா, இரண்டு பேர் சொல்றதிலயும் உண்மை இருக்கு”

“என்ன சொல்ற நீ..? அது எப்படி இரண்டுலயும் உண்மை இருக்க முடியும்..?.”

“எப்பவுமே விஞ்ஞானிகள் வளர்ச்சியை மட்டும்தான் பார்ப்பார்கள். வளர்ச்சிக்காக சில பிரச்சனைகளை எதிர்கொள்வது தப்பில்ல என்பது அவங்களோட சித்தாந்தமென்று எங்க டீச்சர்ஸ் சொல்கிறார்கள்.

அதே நேரம் சுற்றுச்சூழலுக்கு சிறு கேடு நேர்வதை இயற்கை ஆர்வலர்கள் அனுமதிப்பதில்லை. இதுதான் பிரச்சனை”

“அப்போது இதற்கு தீர்வுதான் என்ன?”

“அப்பா.. நான் பெட்ரோலிய வேதியியல் துறையில் இன்ஜினியரிங் படிக்க விரும்புறேன். படித்து இந்தத் துறையில் இருக்கிற பிரச்சனைகளை ஆராயப் போகிறேன். இதில் என்ன உண்மை இருக்கிறதோ அதை மக்கள் கிட்ட கொண்டுசேர்க்கப் போகிறேன். ஒருவேளை அரசுப் பணியில் சேர்ந்தால் மக்களுக்கு எதிரான திட்டங்கள் வரும் போது அதை அரசிற்கு எடுத்துரைக்க முயற்சிப்பேன். அதே நேரம் அந்தத் திட்டத்தில நன்மை இருந்தால் அதை மக்களுக்குப் புரியவைப்பேன்”

“நீ சொல்கிறது சரிதான். உண்மையான அக்கறையோடு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் தீட்டும் போது, இந்த மாதிரி பிரச்சனை வராதென்று எனக்குத் தோணுகிறது. அந்தக் காரியத்தை நீ பண்ணு.. ஆமா அந்தப் படிப்பு எங்க இருக்கு?”

“கோயம்புத்தூர் பக்கத்தில அரசம்பாளையத்தில எஸ்விஎஸ் காலேஜ் இருக்கு.. அங்க இந்த பெட்ரோலிய வேதியியல் பொறியியல் படிப்பு இருக்கு. அங்கதான் நான் சேரப்போகிறேன்”

“அப்போ எல்லாத்தையும் ஏற்கெனவே முடிவு பண்ணி வச்சிருக்கேன்னு சொல்லு”

“ஆமாப்பா.. நான் மட்டும் இல்ல. என் கூடப் படித்த பத்து பேர் இந்த படிப்பைத்தான் படிக்கப் போறோம். எல்லாருமே என்ன மாதிரி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். விவசாயத்திற்குச் சவால் விடுற பிரச்சனைகளைப் பத்தி நாங்க அடிக்கடி பேசிக்குவோம். அப்பத்தான் ஏன் இந்தத் துறையில் படித்து, உண்மையைப் புரிஞ்சுகிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடாதென்று தோணுச்சு. தப்புன்னா தப்பென்று சொல்லவேண்டும். சரியென்றால் இது சரியென்று சொல்லவேண்டும். நாங்க விவசாயிகளுக்கு வழிகாட்டியா இருக்கவேண்டுமென்று முடிவெடுத்திருக்கிறோம்ப்பா”

ராமசாமிக்குக் கண்ணீர் வந்துவிட்டது. மகனைக் கட்டி அணைத்துக்கொண்டார்.

“மகேஷ் உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குப்பா. ஒண்ணும் புரியாம இந்த விவசாயிகள் தவிக்குறாங்க. அவங்களுக்கு விடிவு காலம் பொறக்கணும்… அது சரி.. நம்ம தஞ்சாவூர் பக்கம் நல்ல கல்லூரி இல்லையா..? கோயம்புத்தூர் எஸ்விஎஸ் காலேஜுக்குத்தான் போகணுமா?” என்று கேட்டார் ராமசாமி.

அப்பா... எஸ் வி எஸ் காலேஜ் ல "எல்லா துறைகளுக்கும் அந்தந்த துறை சார்ந்த எக்ஸ்பெர்ட்ஸ் வந்து சிறப்பு வகுப்பு எடுக்கிறார்கள். அங்க தான் அடிக்கடி துறை சார்ந்த கருத்தரங்குகளை நடத்துகிறார்கள். அதே போல சர்வதேச தொழில்நுட்ப மாநாடுகளும் அங்க நடக்கிறது. இதெல்லாம் ஒரு துறையில் சிறந்து விளங்க ரொம்ப ஹெல்ப்பா இருக்கும்ப்பா" என்றான் மகேஷ்.

“அப்புறமென்ன.. உன் விருப்பப்படியே எஸ்விஎஸ் காலேஜ்லயே படி ராமசாமி நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்".

எஸ்விஎஸ் மாணவர்களின் கலை ஆர்வம், மொழித்திறன், படைப்பாற்றல், நுண்ணறிவை வளர்க்கும் மன்றங்கள் குறித்து அடுத்த பகுதியில் காணலாம்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

எஸ்.வி.எஸ் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்
பொள்ளாச்சி மெயின் ரோடு, ஜே.பி. நகர்,
அரசம்பாளையம், கோவை, தமிழ் நாடு - 642109
தொலைபேசி எண்: 0422 2619300 – 309
கைப்பேசி எண்: +91 9047049993 / 9047049996
தொலைநகல் எண்: 0422 2619306
மின்னஞ்சல்: [email protected]

விளம்பர பகுதி

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon